சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பணி
————
பணிக்குப் பணி பரவசம் அடைவாய்
மணியாய் வாழ்வில் மகத்துவம் பெறுவாய்
அன்புக்குக் குனி அகிலத்தை ஆழ்வாய்
இன்பம் இதனால் இருப்பிடம் ஆகும்

காரியம் யாவும் கருத்தொரு மித்தே
வீரயம் கொண்டு விரும்பிச் செய்து
பாரினில் மக்கள் பரவசம் அடைய
கூரய அன்புடன் குணமுடன் வாழ்வாய்

பண்பும் பணிவும் பாட்டன் சொத்து
கண்ணில் வைத்துக் காப்போம் நாமும்
மண்ணில் வாழ்தல் மகத்துவம் ஆனால்
புண்படும் செயல்கள் புரியாது வாழ்வாய்

மனிதம் வேண்டும் மானிடர் வாழ்வில்
புனிதனாய் உலகில் புரிதல் கொண்டு
சொல்லும் செயலும் சுத்தம் ஆக்கியே
வெல்லுவாய் அகிலம் விண்ணிலும் உயர்வாய்/