சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மங்கை மலரே
————-/———-
தாய்க்கு மகளாய்
தரணியில் பிறந்து
சேய்க்கு அம்மாவாய்
சிறப்புடன் வாழ்ந்து
தரணி சிறக்க
தாரமும் போற்றி
பரணி எங்கும்
பாசமலரய் மலர்ந்து
குணத்தில் குண்றாய்
குவலயம் காத்து
மணமும் பரப்பும்
மங்கை பெண்ணே/
அவளின்றி அணுவும்
அசையாது என்று
தவழும் குழந்தை
தானும் அறியும்/
வீரம் கொண்டு
வேங்கையாய் எழுவாள்
பாரமாய் எதையும்
பார்த்திட மாட்டாள்
வேதனை வந்தால்
விரட்டுவாள் காளியாய்
சாதனை புரிவாள்
சரித்திரம் படைப்பாள்
வாழ்க மகளிர்
வாழ்த்துவோம் வாரீர்
வாழ்க வாழ்க
வையகம் போற்றவே/