என்னவரே என்னுயுரே
“””””””””””””””””””””””””””””””””
என்னைப் புரிந்த
என்னுயிரே எனவரே
தன்னை எனக்காய்
தந்தவரே உயிராய்
அன்பை உமிழ்ந்தவரே
வரமாய் கிடைத்த
இன்னமுதே வளமாய்
வாழ்வும் தந்தவரே
என்றும் எந்தன்
இனியவரே இரக்கமுள்ள
என்னவரே இதயம்
நிறைந்த உத்தமரே
இன்றும் வரமாய்
இருப்பவரே உறவாய்
உன்னைப் பெற்றேன்
உன்னில் நானாய்/
கண்டதும் காதல்
கொண்டதும் இல்லை
பண்பாய்ப் பழகி
பற்றிய அன்பு
வண்ணமாய் வந்து
வாழ்வில் விழுந்து
கண்ணில் மணியாய்
கலந்துமே பாசம்
எண்ணில் அடங்கா
இன்பம் கொண்டு
விண்ணவரும் வாழ்த்த
அன்றில்ப் பறவையாய்
மண்ணில் மனிதராய்
மகிழ்ந்து உதிரமுடன்
ஒண்றிய காதலராய்
என்றும் வாழ்வோம்