பரவசம்
—-//////——-/////
பாடும் பாட்டில் பரவசமாகி
பக்தன் கண்டான் பரமனையே
கூடும் கூட்டம் கொண்டாட்டம்
குடும்பம் கானும் குதுகலமே
வாழும் வாழ்வும் வளமானால்
வசந்தம் காணும் வையகமும்
தேடும் சொந்தம் தித்திப்பாய்
திகழ்ந்தால் வாழ்வில் பரவசமே
அன்னை தந்தை அரவணைப்பில்
அன்பாய் வாழ்தல் பாக்கியம்
உலகம் போற்றும் உத்தமனாய்
உதித்தால் மகவும் பாரினில்
பிள்ளை பெற்ற பெருமையினால்
பெற்றோர் காண்பார் பேரின்பம்
தொற்றும் நீங்கிப் பதியினில்
சுகமாய் வாழ்த்தால் பரவசமே