சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

இலக்கு
இலக்கு இல்லா வாழ்வு
கடிவாளம் இல்லாக் குதிரை போல/
தான் போனபோக்கில்
தலைதெறித்து ஓடும்/
எண்ணியது எண்ணமாய்
இருத்தி மனதில்/
கண்ணியமாக்க் காரியம்
கச்சிதமாய் நகர்த்த/
நோக்கம் நிறைவடையும்
நொந்தமனம் சாந்தமகும்/

பள்ளிப் படிப்பதனில்
பாதை மாறாமல்/
கள்ளத் தனமின்றி
கற்றிட்டால் கல்விதனை/
எல்லை நாம்கண்டு
எட்டிடலாம் இலக்கை/
கருவில் சுமந்து
கற்பனையில் மிதந்து/
தருவாய் கிளைகள்
பரம்பி வாழ்வில்/
சாதனைகள் புரிய
நாம் பெற்றவர்கள்/
ஆல்போல தளைத்து
அறுகுபோல வேறூன்றி/
வாழ்வில் சிறந்து
பதினாறு செல்வங்களும்/
பெற்று நீடூழிவாழ
வேண்டும் என்பதே/
எம் இலக்கு
இதுவே நோக்கு:/