சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பாட்டி
பாட்டியுடன் கைபிடித்து பக்குவமாய் நடைநடந்து
ஊட்டிவிட்ட சோறுண்டும் ஓடியாடி விளையாடி
கூட்டிவைத்து எமையெல்லாம் கதைகள் சொல்லி
வீட்டையும் வெளிச்சமாக்கி விருப்பமாய் வாழவைப்பார்

பண்புடன் பக்கவமும் பௌவியமாச் சொல்லி
கண்போல எமைக்காக்க கடவுள் தந்தவரம்
புண்படாமல் எமைக்காத்துப் பொக்கிசமாய் வளர்த்து
மண்ணில் எழுத்தெழுதி மகிழ்வித்த காலமெங்கே

முந்தானை முடிச்சினிலே முடிந்திருக்கும் பணத்தை
எந்தனுக்காய் செலவிடுவார் இச்சையுடன் மனமுவந்து
வந்து மணியடிக்கும் வாய்க்குக் குளிர்கழியும்
தந்து மகிழ்ந்திடுவார் தானும் உருசித்திடுவார்

சோறு குழைத்துச் சுவையாகத் தந்துடுவார்
கூறுபோட்டு தின்பண்டம் கொடுத்து மகிழ்ந்துடுவார்
வேறுபாடு பார்க்காமல் விருப்பமுடன் பேர ர்களுக்கு
வீறுடனே நோய்தீர்ப்பார் நொந்து மனமுடைவார்

என்பாட்டி தங்கம் எண்ணிலாச் சொர்க்கம்
தன்பாட்டில் வேலையெலாம் சடுதியிலே செய்திடுவார்
கதையும் பழமொழியும் கண்ணியமாய்ச் சொல்லிடுவார்
எதைச் செய்தாலும் என்னுடைய பாட்டிபொன்