சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மணி
மணியின் நாதம் மனதிற் கினிமை
பணியைச் செய்ய பகன்றிடு மோசை
பள்ளிக் காரம்பம் பாடசாலை மணியே
துள்ளி யோட துடுப்பா யியங்கும்

மணிக்குப் பணிதல் மானிட மாண்பு
மதங்கள் அனைத்தும் மணியின் தொடர்பே
கண்ணின் மணியும் கடமையைச் செய்யும்
கருத்துடன் வாழ்வில் காரிய மாற்றும்

மணியாய் வாழ மலரு முலகம்
மனமும் மகிழும் மனிதம் சிறக்கும்
சத்தமும் நாதமும் சங்கம மாக
பந்தமும் பாசமும் பரவச மடையும்/