சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

முள்ளி வாய்க்கால்
—————————
வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணே
வருத்தங்கள் பலகண்டு வாட்ட முற்றாய்
பந்தங்கள் தொலைத்து பட்டதுன்பம் யாரறிவார்
பரிதாபம் என்பார்கள் பட்டது நம்மினமே

கல்லால் அடித்தாலும் கரையாத பெரியம்மா
செல்லால் அடிபட்டுச் சிதைந்தாவே குடும்பமாய்
எத்தனை இழப்புக்கள் என்னவென்று சொல்லுவது
இன்றும் வருவாரென்று ஏங்குவோர் எத்தனைபேர்

உருவம் தெரியாமல் உடலும் கிடையாமல்
உலர்ந்த மணலில் புதைபட்ட உறவுகள்
இரக்கம் அற்ற இச்செயலால் என்னபலன்
உண்மைகள் மறையாது ஒருநாள் தெரியும்
கமலா ஜெயபாலன்