சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பெற்றோரே

தன்னலமற்ற அன்பைத் தந்தாய் தாயே
தன்னை உருக்கி தாங்கினார் தந்தையும்
என்னை மண்ணிற்கு ஈன்றனர் இருவரும்
நன்மை தீமை நமக்கு புகட்டினர்

அல்லும் பகலும் அயரா துழைத்து
செல்வம் தேடி தேவை போக்கி
மல்லுக் கட்டி மதிப்புடன் பிள்ளைகள்
நல்லவராய் வளர நவின்றனர் உதிரம்

மூத்த பிள்ளை முயன்று படிக்க
பார்த்துக் கொழும்புக்கு பக்குவமாய் அனுப்பி
பட்டதாரி ஆக்கி பெற்ற பெருமை
எப்படிச் சொல்வேன் பெற்றோர் பெருமை

அன்னையும் பிதாவும் அன்பின் வடிவம்
அதுவே எமது அன்னை வடிவம்
கண்ணில் கண்ட கடவுளர் தெய்வம்
கருனையே அவர்கள் கண்டிடும் வடிவம்/‘

கமலா ஜெயபாலன்