சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மா மா காய்
மா மா காய்
நாதம்
பண்ணின் ஓசையாய்ப் பரவிடுமே
கண்ணில் காண முடியாதே
விண்ணில் அதிரும் வேகமுடன்
மண்ணில் பாயும் நாதமுடன்
எண்ணில் அடங்கா ஒலிகளுமே
எண்றும் அதுவே இசையாகும்

அன்பின் ஊற்று அடிநாதம்
இன்பம் தருமே என்நாளும்
தென்றல் வந்து சேதிசொல்ல
ஒன்றாயக் கூடும் உறவுகளும்
வன்மம் என்னும வலிபோக்கும்
கன்ம வினையும் கரைந்தோடும்