சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

சாதனை
சரித்திரம் படைப்பவன் சாதனை யாளன்
சகலதும் அவனது சக்தியின் படைப்பே
புரிதல் கொண்டு போரிடும் பண்பும்
புத்தியாய் வாழ்வினில் பேணிடும் அன்பும்
விரிந்த வுலகில் வேற்றுமை விலக்கி
வீறு கொண்டு வெற்றியும் கண்டு
பரிவுடன் பகையும் போக்கி புரிந்தும்
பாரில் நினைத்ததை படைத்தல் சாதனையே/

வாகனம் ஓடுவதும் வானில் பறப்பதுவும்
வாழ்வில் வந்தது வானுயர் சாதனையே
கானங்கள் வயலாகி கம்ங்கள் பெருகி
குளங்கள் நிறைந்து குதுகலமானதும் சாதனையே
மானம் பெரிதென மார்பும் தட்டி
மாண்புடன் வாழ்வதும் மறத்தமிழன் சாதனையே
தேனாய் வாழ்வை சிறப்புற வாழ
தேவை சாதனைச் சிந்தனை யன்றோ/

கமலா ஜெயபாலன்