சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபான்

உள்ளத்தின் உகவை
&&&&&&&&&&&&&&&&&&&&

உள்ளத்தில் உகவைபொங்க
உலகத்தை நீயறிவாய்
பள்ளத்தில் வீழ்ந்தலும்
பண்பிலே நீகுறையாய்
கள்ளமில்லா நல்வாழ்வு
கண்டதினால் உயர்வாவாய்
துள்ளுகின்ற மனத்தலே
துயர்தனைத் துடைத்திடுவாய்

அன்னையின் அன்பினிலே
ஆழத்தை நீயறிவாய்
அன்பின் ஊற்றினிலே
அகிலத்தை அணைத்திடுவாய்
இன்பத்தால் இதயத்தில்
இறைவனையும் ஏற்றிடுவாய்
மன்னுயிரை என்நாளும்
மாண்புடன் அணைத்திடுவாய்

வதிவிடத்தில் வாழ்நாளை
வாஞ்சையுடனே பதியவேணும்
கதியற்ற மாந்தருக்கு
கைகொடுத்தே உதவேணும்
மதியுடனே காரியங்கள்
மனதாரச் செய்யவேணும்
நதிபோல ஓடவேணும்
நல்லவராய் வாழவேணும்

கமலா ஜெயபாலன்