சந்தம் சிந்தும் கவிதை

கமலாஜெயபாலன்

“தீ”—சந்தம் சிந்தும் சந்திப்பு 214
கல்லில் தோன்றி காட்டுத் தீயானாய்
சொல்லினால் சுட்டு சொந்தங்கள் பறிப்பாய்
ஆக்கமும் நீதான் அழிவும் நீதான்
தாக்கம் தந்து தரத்தினைக் குறைப்பாய்
வேகத்தில் வீரனாகி வேருடன் அழிப்பாய்
தாகம் தீர தாக்கிச் சாம்ப ராக்கி
ஒன்றும் இல்லாத ஒட்டான்டி ஆக்குவாய்
நன்றும் நீதான் தீதும் நீதான்
சாட்சியாய் உன்னை வைத்தே மக்கள்
சாதனை பலவும் சாதித்து முடிப்பார்
பட்டினத்தாரின் பாட்டுக்கள் தோறும்
பற்றிடும் தீயை பகருவர் அருளாய்
பூம்புகார் நகரை பொசுக்கிய போது
பொய்யரல்லாதோரை தீய்த்த தேன் கூறு
சீதையின் கற்பு சிறப்புக்கு சிதையாய்
சிறை வைத்த இராவணன் நாட்டுக்கும் தீயாய்
பாரத போர் பின் பாண்டவர் புதல்வர்
பரகதி காண கெளரவர் ஆளாய்
தீதிலும் நலனிலும் தீ நீயும் பங்காய்
நன்றும் நீதான் தீதும் நீதான்
ஐந்திலோர் பூதமாய் அகிலத்தை ஆள்வாய்
-கமலா ஜெயபாலன்-

“தீ”—சந்தம் சிந்தும் சந்திப்பு 214
கல்லில் தோன்றி காட்டுத் தீயானாய்
சொல்லினால் சுட்டு சொந்தங்கள் பறிப்பாய்
ஆக்கமும் நீதான் அழிவும் நீதான்
தாக்கம் தந்து தரத்தினைக் குறைப்பாய்
வேகத்தில் வீரனாகி வேருடன் அழிப்பாய்
தாகம் தீர தாக்கிச் சாம்ப ராக்கி
ஒன்றும் இல்லாத ஒட்டான்டி ஆக்குவாய்
நன்றும் நீதான் தீதும் நீதான்
சாட்சியாய் உன்னை வைத்தே மக்கள்
சாதனை பலவும் சாதித்து முடிப்பார்
பட்டினத்தாரின் பாட்டுக்கள் தோறும்
பற்றிடும் தீயை பகருவர் அருளாய்
பூம்புகார் நகரை பொசுக்கிய போது
பொய்யரல்லாதோரை தீய்த்த தேன் கூறு
சீதையின் கற்பு சிறப்புக்கு சிதையாய்
சிறை வைத்த இராவணன் நாட்டுக்கும் தீயாய்
பாரத போர் பின் பாண்டவர் புதல்வர்
பரகதி காண கெளரவர் ஆளாய்
தீதிலும் நலனிலும் தீ நீயும் பங்காய்
நன்றும் நீதான் தீதும் நீதான்
ஐந்திலோர் பூதமாய் அகிலத்தை ஆள்வாய்
-கமலா ஜெயபாலன்-

“தீ”—சந்தம் சிந்தும் சந்திப்பு 214
கல்லில் தோன்றி காட்டுத் தீயானாய்
சொல்லினால் சுட்டு சொந்தங்கள் பறிப்பாய்
ஆக்கமும் நீதான் அழிவும் நீதான்
தாக்கம் தந்து தரத்தினைக் குறைப்பாய்
வேகத்தில் வீரனாகி வேருடன் அழிப்பாய்
தாகம் தீர தாக்கிச் சாம்ப ராக்கி
ஒன்றும் இல்லாத ஒட்டான்டி ஆக்குவாய்
நன்றும் நீதான் தீதும் நீதான்
சாட்சியாய் உன்னை வைத்தே மக்கள்
சாதனை பலவும் சாதித்து முடிப்பார்
பட்டினத்தாரின் பாட்டுக்கள் தோறும்
பற்றிடும் தீயை பகருவர் அருளாய்
பூம்புகார் நகரை பொசுக்கிய போது
பொய்யரல்லாதோரை தீய்த்த தேன் கூறு
சீதையின் கற்பு சிறப்புக்கு சிதையாய்
சிறை வைத்த இராவணன் நாட்டுக்கும் தீயாய்
பாரத போர் பின் பாண்டவர் புதல்வர்
பரகதி காண கெளரவர் ஆளாய்
தீதிலும் நலனிலும் தீ நீயும் பங்காய்
நன்றும் நீதான் தீதும் நீதான்
ஐந்திலோர் பூதமாய் அகிலத்தை ஆள்வாய்
-கமலா ஜெயபாலன்-