வியாழன் கவிதை

கனவு

ராணி சம்பந்தர்

ஆக்கம் 310
கனவு

மனதிலே ஆழமான குழப்பம்
ஆனதிலே உளமாறிய
பிதற்றல்
சனமதிலே அங்கும்
இங்கும் ஓட

இனத்தில் முதல் தெரிவு
நானே
கன்னக்குழி நடிகை எனப் பெயர் பெறவே
பென்னம் பெரிய மகிழ்வு பொங்கிட

சின்னக் கதை ஒன்று
கன்னக்குழி அன்னக்கிளியே வாசியும் -ஒன்று, இரண்டு, மூன்று
கட், கட் சொல்லாது
விழுங்கிடவே

விக்கித் தவித்து ஏதேதோ சொல்ல
டைரக்டர் சொன்னது
மட்டும் ஞாபகமே
குட்டும், குட்டும் இறுக்கிக் குட்டும்

கை நொந்த போதுதான்
தெரிந்தது
இறுக்கிக் குட்டியது
கட்டில் விளிம்பிலே
என் தலையில் அல்லவே
கண்டதும் கனவே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து