சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

எதிர்ப்பு அலை
******************
முந்திட்டம் எதுவும் மூளையில் இல்லை
பன்முக அறிவைப் படித்ததும் இல்லை
தன்னாட்டு வளத்தின் தகுதியும் அறியார்
பின்னெப்படி நாட்டை ஆண்டிட முடியும்

மக்களைக் காக்கும் மகத்துவம் மறந்ததால்
சிக்கினீர் இன்று சீன தேசத்திடம்
தப்பென்று நன்றாய்த் தெரிந்தும் கூட
கப்பல் கணக்கில் கடனை வாங்கினீர்

வேளைக்கு வேளை வேற்று நாடுகளில்
ஆளுக்கு மேலே சொத்துகள் சேர்த்து
நீளும் உங்கள் அரசியல் அரங்கில்
பாழாக்கி அழித்தீர் பண்பான நாட்டை

பூமாலை போட்டுப் புகழ்ந்த தலைகள்
ஏமாளியாய் மக்களை
எள்ளி நகைக்கையில்
ஏமாற்றம் கண்டு அதிரும் உள்ளங்கள்
தாமாகத் தொடர்வர் எதிர்ப்பு அலைகளாய்….

ஒளவை.