சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 216–
“நீர்க் குமிழி”
இளமை படரும் பருவம்
இளமீசை யுடன் என் உருவம்
உளமும் கண்களால் மேய
உந்தும் மனமும் பெண்களை காண
இதயத்தே எவரும் வந் தமர
இல்லை என்றே மனம் வருந்த
உதயத்ஓர் இளங்காலை பொழுது
ஒருத்திக்கு உதவிய ஒரு நேர பொழுது
கண்ணொடு உதடுகள் விரித்து
கனிவான முறுவல் உதடாலே உதிர்க்க
என்னுக்குள் பாய்ந்த மின்சாரம்
இரவில் கனவில் அவளின் சஞ்சாரம்
உன்னிடும் கால் அவள் வீட்டு
ஒழுங்கையில் நடக்கும் நிதமும் நீட்டு
என் முன் எதிர் படும் வேளை
இள நகை நாணல் காதலின் சாடை

**
என்னுக் இருந் தெழும் முறுவல்
இயல்பிலே நான் நாவல் கறுவல்
கன்னத்தே கரை முடி கோலி
கணக்காக பவுடரை முகத்திலே பூசி
முன் தள்ளும் வண்டியை இறுக்கி
மொத்த பெலிற்றில் அழகாய் அடக்கி
என்னென்னவோ அலங்காரம்
எதிர்பார்த் அவளின் மன அங்கீ காரம்
காலமோ கரைந்தது நீள
கவனம் அண்ணனுக்கு என் மீதாக
காதலோ கைக்கெட்டா தூரம்
கண்டிட முடிவு எண்ணி ஓர் இராவில்
ஆயிரம் கடிதம் தொடக்கி
அவை தரா திருப்தியால் கசக்கி
ஈற்றிலே எழுதினேன் கவிதை
எதிர்பார் தவளின் எண்ண இசைவை.

*பேராவல் கொண்டது மனது
பிறந்தது மறு நாள் பொழுது
சீராக அன்றும் நான் உடுத்து
சென்றனன் இடை வேளை பொழுது
ஆறேழு நண்பர்கள் நாங்கள்
அமர்திருந்தோம் கன்றீன் வாங்கில்
நேராக அவள் வந்த வேகம்
நீரோடும் வியர்வையில் நடுங்கதேகம்
தார் நாராய் கிழிந்த தென் கடிதம்
தலை மேலே எறிய காற்றிலே சிதற
கூறான என் ஆசை இதயம்
குதறிய கனல் கண் பார்வையில் வதையல்
ஆறாத என் துயர் நீக்க
அருந்துணையாய் நண்பர் என்றனை தேற்ற
நீரோடை எழும் குமிழ் வாழ்வு-போல
நெஞ்சத்து காதல் நொடியிலே சாவு.

– எல்லாளன்-