சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

“மரபுக் கவிதை”. என் தமிழில் நானும் எழுதுகின்ற கவிதைகள்தான்
நன்றென்று நானும் நம்பி விட்டேன்
தன்னார கவி நடையை தயாரிப்பு ஏதுமின்றி
என் நா உரைப்பதனால்
என்னை பலர் புகழ
இதுதான் கவிதை என்ற இறுமாப்பில் இருந்துவிட்டேன்
முயலை ஆமை முந்தி ஓடி வென்றதுபோல
அயராமல் மரபு கவி
ஆர்வமுடன் கற்று
திறனை வளர்த்தோரின்
தேன் இனிய பா அரங்கை
பாமுகத்தில் பார்த்த பின்பே
பயன் நல்கும் வழி வகையில்
படிக்காமல் கவி எழுதி
அவை எல்லாம் காற்றலையில்
அன்றாடம் பறக்க வைத்த
பிழையை உணர்ந்தே
பெரும் கவலை நான் கொண்டேள்
இறைவா எனக்கு
இன்னும் சில ஆண்டு
இறவாதிருக்க வரம் தருவாய்.
மரபு கவிதையிலும் மன்னன் என பேர் பெறுவேன்.”