சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

வம்சம் என்றொரு சினிமா படம்.
வன்மம் தீர்த்தலே இலக்காய் களம்
அம்சம் ஒன்றிய உறவுகள் இடம்.
ஆத்திரம் மேவி கொலைவெறி வதம்
*ஆசை மனைவி மகன் மேலே கோபம்
அவனை தீர்க்கும் வெறிகொண்ட தீரம்
ஆளை ஊர்மீள செய்தான் ஓர் வஞ்சம்
அவனின்
தாய் உணவில் கலந்தானே நஞ்சும்.
* கொள்ளி வைப்புக்கு மகன் ஊர் மீள
கூடி சூழ்ந்தது கொலை கும்பல் ஆளை
தள்ளி மோதி இள மட்ட தனையன்
தலைகள் கொய்தனன் வீரமாய் தனியன்
*சொத்து பிரிவினை சோராத வஞ்சம்
செத்து மடிந்து சிறைக்குள்ளே
துஞ்சும்
மனை நிலம் காடாய் பாறியே போக
மதம் கொண்ட கோபம் வம்சமே மாள.
கதை என்ற போதும் கருத்துள்ள பாடம்
நெறி வழி இலக்கே பயனாய் கை
கூடும்