வியாழன் கவிதை

எதற்கு ?

ராணி சம்பந்தர்

13.06.24
ஆக்கம் 320
எதற்கு

விண்ணிலே வினோதம்
ஆன வீரமெதற்கு
மண்ணிலே மகிழ்வுடன்
வாழ்வதற்கு

கண்ணில் காணும் காட்சி எதற்கு
அண்ணாந்தவுடன்
ஆனந்தமாவதற்கு
துன்பந்தரும் அன்றாட
செயலோ தூர விலகிடும் உள்ளமதை
அரவணைப்பதற்கு

இறைவன் தந்த கரம்
எதற்கெனில் இயன்ற வரை துதிப்பதற்கு
ஆழப் பதிந்த கால்களோ
கோழையின்றி நிமிர்ந்து நிற்பதற்கே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து