வியாழன் கவிதை

ஊர் வம்பும், கைபேசியும்..

ஊர் வம்பும், கைபேசியும்..!

குளாயடியில கிடுகு குறுக்கு வேலிச் சுவரில..
நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில
பக்கத்து வீட்டு பழசுகள் இரண்டு பவ்வியமாய் வந்தாலே
குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம்.

மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட
ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான்.
வேலைக்கு அவன் போக வீட்ட வேறொருவன் நிக்கிறான்
காலக் கொடுமையென கதிராசி முடிக்க முன்ன..

குப்பத்தொட்டியில ஒரு குறமாத.சிசு
அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம்.
எண்டு தொடங்கி எல்லா வரலாறும்
சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது..

கடுகளவு உண்மையை கடலளவு பெரிதாக்கி
வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்
ஊர் வம்பு என்று சொல்ல..

வந்த சனமெல்லாம் வாயும் காதும் வச்சு
சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு
வெட்டுக்குத்தில போய் ஊரே வெடிச்சு பிளந்து
உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள்.

கலியாணக்குளப்பமும் அனியாய சாக்களும்
வதந்தி கதையால வாழ்விழந்து போனதாம்
அந்தகாலம் .

இன்றும்..
என்னொரு வடிவில எல்லோர் கையோடும்
வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை..

கையில இருக்கிற கை பேசியே- பலருக்கு
பொய்வதந்தியை கொட்டி
புதுப்புதுசண்டைக்கு இளுக்குமாம்
நம்பாதே..

கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை
மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை.

உள்ளத்து தூய்மையில்லா? உணர்வு எமக்கிருந்தால்
கள்ளச் சந்தேகம் உன் கனவிலும் பின் தொடரும்.
இதுக்கு

குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே
திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை”
அனைவரும் பார்க்க அனுமதித்தாலே..
வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும்.
கைபேசி தரும் நல்லதை ஏற்போம் கெட்டதை தவிர்ப்போம்
நானிலம் போற்ர அனைவரும் வாழ்வோம், நன்றி வணக்கம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-(நெதர்லாந்து)