வியாழன் கவிதை

உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு

உழைப்பே என்றும் உயர்வுதரும்
உனக்குள் உறுதி எடுத்திடுநீ
களைப்பே இன்றி உழைத்திடுநீ
காதல் வாழ்க்கை வாழ்ந்திடுவாய்
பிழைப்பே உனக்கு இருந்தாலே
பிறரும் சொல்வார் திறமையன்றோ!
மழையே பெய்து வரப்புயர
மண்ணே விளைந்து பயன்தருமே!

பற்றுக் கொண்டு வாழ்ந்திடுநீ
பாலர் அன்பு பெற்றிடுவாய்
உற்றுக் கேட்டு வளர்ந்தாலே
உலகில் உயர்வு பெற்றிடலாம்;
கற்றுக் கொண்டு உழைத்திடுநீ
காலம் உன்னை வரவேற்கும்
சுற்றி முற்றும் பார்த்திடுநீ
சுகமாய் வாழ உயர்ந்திடுநீ

நகுலா சிவநாதன் 1756