வியாழன் கவிதை

உழைப்பே உயர்வு

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு

உழைப்பே என்றும் உயர்வுதரும்
உனக்குள் உறுதி எடுத்திடுநீ
களைப்பே இன்றி உழைத்திடுநீ
காதல் வாழ்க்கை வாழ்ந்திடுவாய்
பிழைப்பே உனக்கு இருந்தாலே
பிறரும் சொல்வார் திறமையன்றோ!
மழையே பெய்து வரப்புயர
மண்ணே விளைந்து பயன்தருமே!

செய்யும் தொழிலே தெய்வமென்று
சேர்ந்தே பயணம் செல்வாயே
வெய்யோன் பயனை பெற்றுநீயும்
வேராய் வாழ்ந்து முன்னேறு
கையும் வேலை செய்யணும்
காலம் உன்னை வாழ்த்தணும்
பையநீயும் உழைத்து உயர்ந்தால்
பயன்கள் என்றும் பெற்றிடுவாய்

நகுலா சிவநாதன் 1756
https://youtu.be/7_D_xRaLfqs?si=W_ICA9wqxjaQYihS