வியாழன் கவிதை

உழைப்பின் உன்னதம்

வியாழன் கவிதை நேரத்துக்காக..!

உழைப்பே உன்னதம்..
தேவைகள் பெருகிடுமே
புவியில் நாள்தோறும்
தேடியே செல்வமதை
நாடியே சில பேரும்
உன்னதம் உழைப்பு
என்றே அறிந்திடுவோம்
ஓரறிவு எறும்பிடம்
நல்ல பல பாடம் கற்போம்..!

உணவும் உடையும்
இருப்பிடமும் என்றும்
அடிப்படைத் தேவையாம்
அறிவீரோ மக்காள்
அதற்கும் வழியறியாது
அந்தரிப்போர் எத்தனையோ
உடலில் உறுதி கொண்டு
உணர்வில் நம்பிக்கை சேர
உழைக்கும் வர்க்கம்
ஓடும் உழைப்பை நாடி..!
சிவதர்சனி இராகவன்
2/5/2024