வியாழன் கவிதை

உலகின் நிலை மாற என்னென்ன கொண்டுவருகிறாய்!

உலகின் நிலை மாற
என்னென்ன கொண்டுவருகிறாய்..

வியாழன் கவி 1918..
நிலைகொண்ட புவிமீது
நிறைவாகப் பிறந்தவளே
விலையற்ற உயிர்க்காக
விருதென்ன கொண்டு நீ
விரைந்தே வருகிறாய்…!

புதிதான உன்வரவால்
நம் பரிதாபம் போயிடுமோ
தினந்தோறும் அழிவுகளும்
திசைமாறிய மனங்களும்
விசையான படகெனவே
இதை மாற்ற வருவாயோ..!

அன்பென்ற ஒரு குடைக்குள்
அணைத்தெம்மை ஆள்வாயோ
இன்னும் எதிர்பார்ப்பை
ஏமாற்றம் ஆக்குவாயோ
எள்ளளவு சுகமதையும்
எமக்கீய வருவாயோ..!
சிவதர்சனி இராகவன்
11/1/2024