சந்தம் சிந்தும் கவிதை

இ.கௌரிபாலா

தொற்று
**********
விடம் கொண்ட
நெஞ்சில்லை அதனால்
திடமாய் உள்ளேன்
படபடப்பு இல்லை
அடம் கொண்ட வீரம்
என் வாய்ச் சொல்லில்
சீச்சீ அப்படி இல்லை
கொஞ்சமேனும் இருக்கு!

சரி என்னையும்
பற்றியது
ஓமைக்ரோன் புளூ
யாரையும் விட்டபாடில்லை
நாளுக்கு நாள்
வேகமாய் பரவுகிறது
நாமோ
ஓய்ந்த பாடில்லை!

இரண்டு தடுப்புக்கள்
பயத்துடன் போட்டும்
இன்னும் போடனுமாம்
இனி முடியாதென்றோம்
முன்னேற்புடன் அச்சுறுத்தல்
கதவைத் தட்டிவிட்டதே!

சரி எப்பொழுது
இதிலிருந்து விடுதலை
பத்து நாட்களின் பின்
மறுபடியும் வேதாளக் கதை
இது தொடரத்தான் போகுது
நாம இனிச்
சூரியனில்தான்
குடியேறணும்.

நலமுடன்
இ.கௌரிபாலா