வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 187
பெண்கள் உலகின் கண்கள்

ஆண்களின் சொர்க்கபூமி பெண்கள்
பொறுமையின் சிகரம் பெண்கள்
தம்மினத்தின் எதிரியாக இருப்பதேனோ
யார் செய்த சாபமோ யானறியேன்

தனித்து நின்று களம் கண்ட
பல கைம்பெண்களின் திறமை கண்டு
வியந்து நின்றேன் நான்
இப்போ குறைவது காலமாற்றமோ நானேறியேன்

புரியாத புதிர்தான் பெண்கள்
ஆயிரம் ரகசியம் புதைந்து
கிடக்கும் சேமிப்பு பெட்டகம்
இறைவனின் படைப்பு அதுதானோ நானறியேன்

நன்றி
வணக்கம்