வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 222
பெண்

கருணை அன்பு தியாகம்
கொண்ட வைரமான உருவம்
மனம் விட்டு பேசும் துணை
வாழ்வில் துன்பம் துடைக்கும் துணை

வீட்டோடு மட்டும் இருப்பவள் அல்ல
அறிவியல் அரசியல் கலை என
பல துறைகளில் பறக்கும் பறவை
சந்ததியை வளர்க்கும் பெண்ணே

ஆண் துணையின்றி தனியாக
குழந்தைகளை வளர்க்கும்
திறமை கண்டு மெய்சிலிர்த்தோம்
இயற்கை கொடுத்த வரமோ

நன்றி
வணக்கம்