வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 219
பொங்கும் உளமே தங்கும் தையே

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார் அங்கே
தை பிறந்தால் விலை ஏற்றம் இங்கே
வேலைவாய்ப்பு அதிகரிப்பால்
தை தங்க பொங்கும் உளமே

பசித்தவர்க்கு உணவளிப்போம்
நோயாளிகளுக்கு உதவிடுவோம்
நல்லது செய்து அன்புடன் வாழ்வோம்
பொங்கும் உளமே தங்கும் தையே

பழையன கழித்துப் புதியன காக்க
பகுத்தறிவுடன் வந்திடவே
ஒன்றாய் இருப்போம் அனைவருமே
தங்கட்டும் தை பொங்கட்டும் உளமே

நன்றி
வணக்கம்