வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 217
ஆண்டுகள் 19

கடலன்னை மிகையாக சினுங்கியதில்
வந்ததே பேரழிவு இவ்வுலகில்
எல்லா பக்கமும் அரவணைத்தவளின்
ஆவேசத்தால் வந்த வினை இதுவோ

அவளுக்கேற்பட்ட மனவழுத்தமோ
தட்டுக்கும் தட்டுக்கும் தோன்றிய தகராறோ
பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்தாள்
2.5லட்சம்பேரை கொண்டு சென்றாள்

தரை உன்னை காதலிக்கவில்லை
எனும் ஆவேசத்தாலே
எல்லாவற்றையும் அழித்தாயோ
இனியாவது அமைதி காண்பாயோ

நன்றி
வணக்கம்