வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 215
காலம்

காலத்தின் சுழற்சியால்
எனக்கென மாறிப்போக
கண்ணீருடன் காயங்களையும்
கேள்வியை பதிலாகவும் மாற்றும்

கடந்து வந்த பாதையின்
தவறுகளை நினைவுகளை
அனைத்தையும் உணர்த்தி நின்று
அனுபவங்களை தருவதும் காலம்

சண்டை போட்டு பேசாமல்
இருக்கும் காலம் போய்
பேசினால் சண்டை வரும் என
ஒதுங்கும் காலம் இப்போ

கடந்து வந்த பின்பே
என்னை கலங்கடித்த காலம்
கடுமையான காலம் அல்ல
வாழ்வை வடிவமைத்த காலம்

நன்றி
வணக்கம்