வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 205
பாராமுகம் ஏனோ
ஆறுமுகனுக்கு ஆறுநாள் விரதத்தால்
அருள் வேண்டுபவர் நடுவில்
நல்லூர் முன்றலில் பன்னிருனாட்கள்
நீரின்றி விரதம் இருந்தாரே

மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
பார்த்தீபனின் பட்டினிப்போர்
தெரியவில்லையே நல்லூரானின் கண்ணுக்கு
தன்னை உறுத்திய தியாகம்

ஒரு நாட்டிலேயே ஒரு பக்கம்
நினைவு நாளை சிறப்பாய் கொண்டாட
மறுபக்கமோ நினைவுநாளுக்கு மறுப்பு
தடைசெய்யப்படுவது தான் நியாயமா

நன்றி
வணக்கம்