கவிதை 200
தன்னம்பிக்கை
தனியே அழும்பொழுது கைகொடுக்கும்
மனம் உடையும் பொழுது உற்சாகம் தரும்
வாழ்க்கை வெறுக்கும் பொழுது ஆறுதல்படுத்தும்
அதுவே உன்னுள் இருக்கும் தன்னம்பிக்கை
கைகள் உழைக்கத் தயங்காது
தன்னம்பிக்கை கொண்டவனின் மனம்
தோல்வி கண்டாலும் போராட்ட குணம்
கொண்டவன் வருவான் வெற்றியாளனாக
எதை இழந்தாலும் என்னை இழக்காதே
ஜெயித்துக் கொண்டே இருப்பாய்
உன்னை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை
துணையாக இருக்கும் தன்னம்பிக்கை
நன்றி
வணக்கம்