வியாழன் கவிதை

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 168
துளி நீர்

விழும் ஒவ்வொரு துளி நீரும்
மண்ணை முத்தமிடும் பொழுது
வாசனை நாசியை அடைய
மனதுக்கு வரும் தெம்பு

துளிநீர் விழுமா என
ஏங்கும்ஆபிரிக்க நாடுகள்
கடலுக்குள் வீணாகும் நீர்
நாடும் மக்களும் பலர்

மனித இனம் சிந்திக்குமா
என்ற ஏக்கம் எனக்குள்
உலகம் திருந்தாவிடிலும்
திருந்திவிடுவோம் நாமே

நன்றி
வணக்கம்