வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை165
மாற்றத்தின் திறவுகோல்
மாற்றம் என்னும் சொல்
மாறாது என எண்ணி
சமூகமும் மாறாதிருப்பது
முன்னேற்றத்தை மறுப்பது

அடுத்த தலைமுறையாவது
மாற்றத்தில் உயர்வடைந்து
எம்மினத்தை முன்னேற்றினால்
மகிழ்ந்திடுவோம் எல்லோருமே

எம்மவர் திறவுகோலை பாவித்து
மாற்றங்களை இங்கு கொண்டுவந்திடுவோம்
சொல்லில் நில்லாமல் நாம்
செயலில் முயன்றிடுவோம்
நன்றி
வணக்கம்