வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

ஆகா வியப்பின் விழிகள்……..

வசப்படும் மொழிதனில்
விசையொடு மொழிதலில்
திசைகளை. வென்றிவள்
அசைந்தெழுந்து இசைகிறாள்

வெளிப்படு திறன்மனில்
ஆளுமைச்சரிதமாய் -தன்
தாய்மொழித்தமிழவள்
குழந்தையாய். தவழ்கிறாள்

அன்னை அபிராமி குழந்தையோ -இவள்
அழகு தமிழன்னை. தோழியோ
வென்றாழும் செயற்திறன்
நின்றாளத். தொடர்கிறாள்

திடம்கொண்டாளும். தனித்திறன்
அதை தொடர்ந்தெழுதும். வினைத்திறன்
வேக விவேகத்தின். மொழித்திறன்
செயல்முனைப்பெழுதும். உயர்திறன்

சின்னவள் விழிகளி்ல் ஒளித்திரள் மின்ன
பெரியவள் இவளென உயர்வுள்ளல் எழ
வியப்பொடு வியப்பொடு பெருவாழ்த்து
ஆயிரம் தடமென்ன பல்லாயிரம்தடம் தொடுக……