வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

மொழியடி அதனை மொழியடி…………

மொழியடி மொழியடி என் பெண்ணே
தமிழ் மொழி தன்னால் அமிழ்தெழுது
தேனினுமினிய மொழி தொடுத்தாய்
தீண்டும் போதினில் எனையிழந்தேன்

கொவ்வை மொழிதனில் அழகிருக்கும்
குவிந்து மொழிகையில் உயிர் துடிக்கும்
பேசும் அழகினில் மயங்கி எழ-என்
பிறப்பின் பெரும் பயன் உணர்ந்து நின்றேன்

தேவதை மகளாய் நீ தெரிந்தாய்
தெள்ளமுதினையே. எனக்களித்தாய்
உறவின் அழகே. உன் மொழி உதிர்வின்
உயிரின் வேரதைத் தொட்டதடி

சின்னக்கண்மணி. மொழியடி நீ
முத்தமிழ் கலந்து முரசறைந்தாய்
அழியாத்திடத்தனை உணர்த்தி. வந்தாய்
அழகுச். செல்வம் எனை மறந்தேன்