வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

மூப்புக்குள். முனகுவதோ…………

மலரும் தினங்களின்
மகிழ்வின் செழிப்பினில்
தினமும் முகிழ்த்திடும்
அழகின் பொழுதுகள்

இரவும் பகலுமாய்
இருளும் ஒளியுமாய்
மகிழ்வும் துன்பமும்
மனதின். நினைவினில்

எழுதும். வாழ்வினில்
ஏற்றமும். இறக்கமும்
தளராப். போக்கினில்
தளிர் விடும் ஏற்றமே

விலகா. நேர்மையும்
விளைந்தெழும். பேரன்பதும்
இசைந்து. இழைந்தெழின்
வசப்படும். வாழ்வியல்

கொடுத்தவை. மீள் பெற
விதைத்தவை. அறுவடை
விஞ்சிடும். பொழுதுகள்
மீள் தரும்நினைவலை

மூப்பென்ன. முடங்கிடவோ
நிறைத்த அனுபவம்
நிறைந்தணைக்கும் உறவலையுள்
தொட்டெழுதும் முதுமைக்கு

ஈடு இணை வேறெதுவோ
முனகாமல் முடங்காமல்
உயிர்ப்புடனே பொறித்தெழுந்தால்
வாழ்கதைக்கும் பொருள்நிறையும்