வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

உலகின் நிலைமாற என்ன கொண்டு
வருகிறாய்………

நித்தமுமாய் சுழலுகின்ற உலகு ஆங்கு
சிந்தனையின் சுழலுக்குள் மாந்தர்
பல்லினத்தின் உயிர் உறையும் உலகில்
பல்கி வரும் பேரதிர்வைக் காணீர்

புதியவளாய் பிறக்கின்ற பொழுதே -உனை
தாங்கி நடை பயில்கின்ற ஆண்டே
எத்தனையாய் புதிய விதி படைத்து-இங்கு
எங்களையே தாங்கி நடை பயில்வாய்

காலநிலை மாற்றங்கள் நிகழ கரை
புரண்டோடுகின்ற. நீரலைக்குள் ஆழ்ந்து
வாடி எழும் மனித குலம் முன்னே
நில நடுக்க அகழி வெட்டி உமிழ்ந்தாய்

விசித்திரத்தின் சித்திரமாய் திகழும் -எங்கள்
வாழ்குறியின் பொருளெதும் ஆண்டே
நாம் திருந்தி மெல்ல உனை காத்தால்
மனம் மகிழ வாழ்வமைப்பாய் என்பேன்

உழைப்போடு உயர்வுள்ளல் கொண்டு
மனிதத்தை பேணி எழும் மாந்தர்
நிலை மாறி இவர் எதிர்நீச்சல் கொள்ள
ஏற்றமிகு ஆண்டே நீ. வருவாய்