வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

சித்திரமே நீ
செயல் கொள்வாயா……………

சித்திரப்பதுமையாய் எந்தன்
சிந்தையுள் புகுந்து கொண்டாய்
பைந்தமிழ் உரையுள் என்னை
பகடையாய் உருட்ட வந்தாய்

என் தமிழ் அணங்கே உன்போல்
பெண்தனை உளத்தில் கொள்வேன்
தலைமையில் உன்னைத் தாங்க-என்
ஆயுளில் இடமே. இல்லை

உணர்வினுள் உயிரினுள் வேள்வியுள்
யாகத்தின் ஆகுதி ஆகி நின்ற
அத்தனை உயிர்ப்பின். நிறைவும் உன்
சதிதனில் சரிந்து. போமோ

வெந்தணல் சுமந்தோர் இன்றும்
வேகித்தம் வாழ்வைக் கடக்க -ஏன்
இத்தனை. போலி நிறைத்துன்
கபட நாடக முகத்திரைகள்

இன்னமும் நம்பி வீழ மூடரா நாமும்
இழந்தவர் கை தொடுத்து- அவர்
இதயத்தின் வடு களைந்து. -நாம்
தாய் நிலத்தின் வளத்தைக் காப்போம்