வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

மனிதத்தின். நேயமே………..

மனிதத்தின். நேயமே
மாண்புறு. நேயமே
வேஷத்தைக் கலைத்தெழும்
வித்தாகும். உயிர்த்துளி

உணர்ந்தெழும் சிறுநொடி
உணர்வோடு கலந்தெழும்
பாகுபாட்டினை அறுத்தொரு
பகுத்தறிவினில் விளைந்தெழும்

அனுதின வாழ்வினில் நிதம்
அனைத்திலும் தொடுத்தெழின்
ஆயிரம் சிக்கல்கள்
அனுசரணையுள் விலகிடும்

தேசத்தின். மைந்தர்கள்
நேசத்துள் இழைத்தெழ
மாபெரும் மாண்பினுள்
மகிழ்ந்தெழும். உறவினுள்

கருவினுள் முகிழ்ந்தெழும்
கருணையுள் புடமிடும்
காத்தெழும் வளர்ப்பினுள்
வாழ்க்கையாய் வளமிடும்

மனிதத்தின். நேயமே
மாபெரும். சக்தியாய்
உலவிட. உயர்விட
நித வாழ்க்கையே அழகு. தான்