வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

மீண்டுமோர் கார்த்திகை……….
மீண்டெழ முடியாத பேரிடிகள்
மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை
ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி
அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம்

தீபமும் தூபமுமய் வணங்கிடுவார்
ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி
அவலமாய் தினம்தினம் அலைகின்றோம்
அனுசரிக்க உறவுகளின் கரங்களெங்கே

வானத்தின் விரிசல்களாய் குடிசைகளும்
வறுமையின் கோடுகளாய் வாழ்வு வட்டம்
எதையெண்ணி எமையவர் விட்டகன்றார்
அந்த உன்னத்த்தை உணர்ந்தார் யாருளரோ

யாசகம் நாம் கேட்கவில்லை -நம்
குமுறல்களால் கோலமிட்டு. வாழுகிறோம்
வழிகாட்ட உறவுகளைத் தேடுகிறோம்
பரிவட்டம் பல்லக்குஎதுவும் வேண்டாம்