வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

சிறியவனே உனக்கோர்
மடலிது…………

எங்கள் இளையவன் இவன்
குதூகலத்தின். அமைதியின்
அன்பின். பாசத்தின். பக்குவத்தின்
நேசிப்பின் நேரடி முகவரி. இவன்

இளைஞன் இவனோர் குழந்தை
வார்த்தைகளால் இழைத்திட முடியா
பேரிழப்பு உன். உயிரின் களவு
ஒற்றை நொடியில் நீ மௌனமானாய்

தூங்கும்உன் விழி. காண முடியா. நாம்
உனை தூக்கி வளர்த்த பெற்றவர். நிலை
கனவில் கூட. கற்பனையாய்
போய் விடாதா அந்த நிமிடமென அங்கலாய்ப்பு

நேசத்துக்குரிய செல்வமே. உந்தனை
இழந்து தவிக்கும் உன் சொந்தங்கள்
கட்டி அணைத்து கதறும் குடும்பம்
ஆனாலும் நீ எங்களோடிருக்கிறாய் என்ற உணர்வு

வாழ்ந்து கொண்டிருப்பாய் நீ
நினைவுச் சுழல்களோடு புன்னகைத்து…….