வியாழன் கவிதை

இராவிஜயகௌரி

பெருகிடும் வலிமை
பெற்றுயர தடையேது…….

ஓடிடும் நொடிகள்
ஓயாத வாழ்வின் நொடி
வித்தாகும் உழைப்பின். வலு
அதனை உயிர்ப்பெழுதும். வலிமை

வலிமை. இளமை அது வளமை
என்றெழுதும் சுழல் பொழுதின் சுழற்சி
முயற்சித் துடுப்போடு. தடையலை உடைத்து
தளரா விரைவுடன் எதிர்நீச்சல் பயணம்

சோர்வு அயர்ச்சி தாழ்வுணர்வு
ஒடுங்குதல் அலட்சியம் எத்தனை
எத்தனை காரணிகள் நமக்குள் ஏற்றபடி
காரணம் தேடும் காரிய கர்த்தாக்கள் நாம்

தடை உடைத்துவிடை பகர்ந்து
வினாக்களுக்கு வியப்புற செயலாக்கி
தொடரும் சுட்டினில் தொடுபுள்ளி
நாமே நமக்கு பெருந்தடைகல்

சிதற அடித்துஉயரப்பறப்போம்
எல்லைகளற்ற வானம்பாடிகளாய்
வலிமைச்சிறகின். வனப்புணர்ந்து
விடியல்கள்ந மதாக விடிவெள்ளிகளாய்