சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

பட்டினியில் நாடு
—————————
வெந்து கிடக்கும் காட்டில்
கொழுந்து விட்டு எரிகிறதே
நொந்து உழைத்தவர் வயிற்றிலேறி
அழுகிறார்கள் வெம்பியே உறவுகள்

தந்தை தாய் பேணிக் காத்த நாடிதுவே
உழுதுண்டு வாழ்ந்தார் அந்நாளில்
பந்துபோல் சாணக்கியமாய் அரசியல்
பழுத்த பழங்களின் தில்லுமுள்ளும்

முந்தையர் ஆட்சிகள் இப்படியில்லை
எழுந்தே நின்றனர் தெம்புடன்
எந்தையும் அடிபணிந்து கேட்டதில்லை
பொழுகள் அதுவே பொன்னானவை

கந்துவட்டிக் கோபுரங்கள் கல்லாய்
கழுகுப் பார்வைக்கு உசரமாய்
அந்நியன் எல்லையை அண்டம்
முழுவதும் பார்க்கவே கொடையாம்

வந்தது சோதனை சிறியநாட்டில்
தொழுதிடுவோம் கடவுளை மீழெழப்
பிந்திய செய்தியாய் உறுதிபெற
வழுவாமை நன்றென வேண்டுகிறேன்

இராசையா கௌரிபாலா.