சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

பேசாதவர்கள்
—————

நியதிக்குள் சிக்கி நிரந்தரமாய் சிலபேர்
சயனத்தில் ஆழ்ந்து சலித்துப் பலபேர்
சந்தர்ப்பம் அமைந்தும் சரித்திரம் தொலைத்தோர்
பந்தங்கள் இருந்தும் புரிந்து பேசாதோர்

கண்கள் இருந்தும் கதைகள் கூறாது
மண்ணில் வாழ்ந்தும் மரித்தவர்போல் இன்று
உண்மைகள் மறைத்து உறங்காது வாழ்பவர்
எண்ணத்தை அடக்கி என்றுமே பேசாதோர்

தீயவை கண்டு திரும்பாமல் செல்வார்
தூயசிந்தை அற்று திருடன் போலும்
பாசம் நடுவே பாசாங்குடன் வேசம்
பேசாதோர் பேசட்டும் பார்ப்போம் நாமும்.

இராசையா கௌரிபாலா.