சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

எனது உலகம்
——————-
எனது உலகம் அம்மா
இல்லை இல்லை அப்பா
சற்றுச் சுதாகரித்து மனைவி
அதுசரி சகோதரங்கள் எங்கே கேள்வியுடன் அப்படியே பிள்ளைகள்
மனதின் வெளிப்பாடு ஓருங்கே

பொதுவில் இவைகள் சற்றும்
மாறுபட்டு விலத்திப் பார்க்க
எங்கள் நடைமுறைகள் ஒருபுறம்
இசைந்தும் வளைந்தும் உலகத்தை
நேசிக்க விருப்பம் இன்றி விரும்பி
கடந்து செல்லும் யாத்திரிகன்

இங்கே அவசியம் ஆனாவசியம்
இரண்டில் ஒற்று மட்டும் முதன்மை
அப்படியே வாழ்கை வட்டத்தில்
பூமிக்குள் சுழிபோடும் மனிதன்
தனக்குள் வட்டம் போட்டுத்
தாண்டிட முடியாது தவிப்பும்

விரும்பியவை மட்டுமே என்றும்
எம்முடன் வந்து சேரும்
விருப்பம் அற்றவை ஒதுங்கியே
செல்லும் எதிர்நீச்சல் இன்றி
நான் நானாக வாழ்ந்து
நாமாய் செல்வோம் நெடுதூரம்.

இலண்டனிலிருந்து
இராசையா கௌரிபாலா