சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

ஏறு போல் நட
———————
கூரிய கண்ணில் கர்வம் கொண்டே
நேரிய அவன்சொல் நன்நெறி காக்கும்
வீரியமாய் நெஞ்சும் வளையாத பாங்கும்
பேரினைச் சொல்லும் பேராளன் காளையென்று

அறமதைப் பேணும் ஆடவனாய் நற்றலைவன்
மறமதைப் புரிந்து மரித்திடத் துணிவுடன்
புறமதில் குத்தாத போர்வாழ் கொண்டே
இறப்புடன் வீரன் இறவா வரத்துடனே

நற்பண்பு கொண்டே நாணிலம் போற்றிட
கற்பாக ஏற்றுக் காத்திடும் அரசன்
பற்றாளன் என்றே பறைசாற்றி நிற்கும்
விற்பன்ணன் ஏறுபோல் வையத்தில் வாழ்வான்.

இலண்டனிலிருந்து
இராசையா கௌரிபாலா