வாழ்க்கைப்பாடம்
—————————
மனிதன் கடந்து செல்லும்
காலத்தின் மாற்றம்
அதுவே வெற்றியாகவும்
அதுவே அனுபவமாகவும்
இருவேறு நிலைகளைத் தருகின்றது.
வென்றவன் தலைக்கனத்தில்
துள்ளிக் குதிக்கிறான்
ஏணியில் ஏறி உயரத்தை
அடைய நினைத்தவன்
கீழே விழுந்தும்
மீண்டும் எழுந்து
இதுவொரு படிப்பினை
எனவாறே முயல்கிறான்.
தோல்வியை ஏற்றுக்
கொள்பவன்
அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றான்
அதில் நாளை
வெற்றியும் அடைகிறான்
தோல்வியை ஏற்றுக் கொள்ளாதவன்
மீண்டெள முடியாது தவிக்கிறான்.
எல்லாமே வாழ்க்கையின்
படிப்பினைகள் முயலாமை
என்று எதுவும் இல்லை
ஏதோ நாளுக்கு நாள்
கற்றுக் கொண்டுதான்
இருக்கிறோம்.