சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

பரவசம்
————

பழகிப் பார்க்கப் பருவங்கள் பரவசம்
சுழலும் பூமிதனில் சுற்றிடப் பரவசம்
நிழலும் தொடருதே நிசத்தின் பரவசம்
மழலை மொழியில் மயங்கிடும் பரவசம்

பூக்கள் எல்லாம் புலர்ந்திடப் பரவசம்
ஏக்கம் தொலைந்த இரவும் பரவசம்
ஆக்கம் ஊக்கம் அளித்திடும் பரவசம்
பாக்கள் இனித்திடும் புரிதலில் பரவசம்

எல்லாம் பரவசம் எதிலும் பரவசம்
நல்லவராய் அவனியில் நாளும் பரவசம்
வல்லமை தந்து வானுயரப் பரவசம்
இல்லாப் பிறப்பை இனிதாக்கும் பரவசமே.

இராசையா கௌரிபாலா.