சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா.

இலக்கு
————
கனவுகள் மெய்ப்படக் காரணம் வேண்டும்
மனக் கதவுகள் மீதமாய்த் திறந்திடவே
கனதிகள் அதிகம் காற்றினில் பறந்திட
தனதாகும் இலக்கு தீர்வாய் அமையும்

ஒற்றைச் சிந்தனை ஓராயிரம் தோல்விகள்
பற்றியது மாறாது பண்பட வசமாகும்
வெற்றியே இலக்கு வெண்மை உள்ளத்தில்
உற்றவை கிடைக்கும் உயரத்தை அடைந்திடவே

தெளிந்த சிந்தை தீரா வேட்கையுடன்
களிறு பலத்துடன் காதல் கொள்ளவே
ஒளியது வாழ்வை ஒளிரச் செய்யும்
உளியை வைத்து உணர்வைச் செதுக்கிடவே.

இராசையா கௌரிபாலா.